Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது

ஜுன் 18, 2021 05:53

திருப்பூர்: நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை மற்றும் கிவ் இந்தியா, சுவஸ்டி நிறுவனங்கள் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 12 அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு 15 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர். 

கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நிலையில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் இத்தகைய ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க தீர்மானித்து முதல்கட்டமாக திருப்பூரில் இணை சுகாதார நல அலுவலர் அலுவலகத்திலும், மாவட்ட சுகாதார இயக்குனர் அலுவலகத்திலும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர். 

நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை மலைவாழ் மக்கள், ஆதரவற்ற பெண்கள், முதியோர்களுக்கான ஆதரவு இல்லம் போன்ற பணிகளுடன்  எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்ச்சியில் என்.எம்.சி.டி அறங்காவலர் ஏ.எஸ்.சங்கரநாரணனயணன், மாநில பொறுப்பாளர் ஜெய்கணேஷ், சுவஸ்தி நிறுவனத்தினர் கலந்து கொண்டு இணை இயக்குநர் பாக்கியலட்சுமியிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்
 

தலைப்புச்செய்திகள்