Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இஸ்லாமிய மக்களுக்கு உடலை நல்லடக்கம் செய்ய 97 செண்டு நிலம்: எம்/எல்/ஏ. செல்வராஜ் வழங்கினார்

ஜுன் 18, 2021 05:57

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய மக்கள் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய போதிய இடவசதி இல்லை என கடந்த நான்கு ஆண்டுகளாக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  திருப்பூரில் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது இஸ்லாமியர்கள் நீண்ட நாள் கோரிக்கையான கபர்ஸ்தான் (மயானம்) அமைத்துத்தரப்படும் என தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், திருப்பூரில் வசிக்கும் இசுலாமியர்களுக்கு திருப்பூர் காங்கேயம் சாலை நாச்சிப்பாளையம் பகுதியில் 97 செண்ட் இடத்தில் உடல்களை நல்லடக்கம் செய்ய கபர்ஸ்தான் (மயானம்)  இடத்தை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் இன்று பட்டா மற்றும் அந்த இடத்தின் சாவியை வழங்கினார்.

மேலும் எம்எல்ஏ செல்வராஜ் கூறுகையில், இந்த இடத்தில் திமுக கட்சி  சார்பில் 10 லட்சம் மதிப்பில் இடத்தை சுற்றியும் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது,  சுமார் நூறு மரங்கள் நடப்பட்டுள்ளது, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது, 2 ஆயிரம் கொள்ளவுகொண்ட நீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் கூறினார். திருப்பூர் மாவட்ட மஸ்ஜித் சேவை குழுக்கள் கூட்டமைப்பு மாவட்ட மஸ்ஜித் சேவை குழுக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மாற்றுத்திறனாளிகள் 30 குடும்பங்களுக்கு 1700 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கப்பட்டன.

தலைப்புச்செய்திகள்