Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலகத் தலைவர்கள் தரவரிசை - மீண்டும் முதல் இடம்பிடித்தார் பிரதமர் மோடி

ஜுன் 19, 2021 11:09

வாஷிங்டன்: பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை செய்து வந்தாலும், அவர் இன்னும் உலகளவில் செல்வாக்குமிக்க தலைவராக இருக்கிறார். அதற்கு சமீபத்திய ஆதாரம்தான் இது. அமெரிக்காவில் உள்ள தர உளவு நிறுவனம் ‘மார்னிங் கன்சல்ட்’ உலகத்தலைவர்களின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி தர வரிசைப்பட்டியலை வெளியிட்டு உள்ளது.

ஆன்லைனில் பொதுமக்களை பேட்டி கண்டு இந்த கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், உலகளாவிய பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் பிரதமர் மோடி. இவர் 66 சதவீத ஆதரவைப் பெற்றிருக்கிறார். கொரோனாவின் 2-வது அலையை சரிவர கையாளவில்லை என்று கூறி அவருடைய செல்வாக்கு குறைந்து விட்டது என எதிர்க்கட்சியினர் குறை கூறினாலும் அவர் செல்வாக்கு உலகளவில் கொடி கட்டிப்பறக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

முதல் 10 இடங்களைப் பெற்றிருக்கிற தலைவர்களும், அவர்களின் செல்வாக்கு சதவீதமும்:

இந்திய பிரதமர் மோடி 66 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 65 சதவீதத்துடன் 2வது இடத்திலும், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மேனுவல் லோபஸ் ஓபரடார் 63 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார். 4வது இடத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் 54 சதவீதத்துடனும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலா 53 சதவீதத்துடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.

ஆறாம் இடத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 48 சதவீதத்துடனும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 44 சதவீதத்துடன் ஏழாம் இடத்திலும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் 37 சதவீதத்துடன் எட்டாம் இடத்திலும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான் சேஸ் 36 சதவீதத்துடன் ஒன்பதாம் இடத்திலும், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ 35 சதவீதத்துடன் பத்தாம் இடத்திலும் உள்ளார்.

தலைப்புச்செய்திகள்