Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனாவால் உயிரிழப்பவர் விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு

ஜுன் 20, 2021 01:01

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட முழு விவரங்களையும் மருத்துவமனைகள் சரியாக பதிவேற்றம் செய்கிறதா என்பதை மாவட்டஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பிய கடிதம்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து திரும்பினாலோ, உயிரிழந்தாலோ அவர்களது பெயர், முகவரி, வயது உள்ளிட்ட விவரங்களை மருத்துவமனைகள் சரியாக பதிவேற்றம் செய்வதில்லை என்றும், இதனால், இறப்பு தொடர்பான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் அரசுக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற விவரங்களை சரியாக பதிவு செய்வது குறித்து ஏற்கெனவே பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, மாவட்ட ஆட்சியர்கள் இதில் நேரடியாக தலையிட்டு, சரியான விவரங்களை பதிவுசெய்யுமாறு மருத்துவமனை அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் போன்றவை தாமதமின்றி கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்