Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை- போலீஸ் விசாரணை

ஜுன் 21, 2021 10:34

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உமர்நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சாயிதா என்ற சைதமா (வயது 40). கணவரை பிரிந்து தனது 18 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு மகள் சென்றிருந்தார். சைதமா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் சைதமாவின் மகள் வீட்டிற்கு வந்த போது அவருடைய தாய் சைதமா நிர்வாண நிலையில், உடலில் பல இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்தார். வீட்டில் இருந்த இரும்பு கட்டில் மற்றும் இதரபொருட்கள் உடைபட்டு கிடந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது இரவு சுமார் 11 மணியளவில் ஒருவர் சைதமாவின் வீட்டுக்கு வந்துவிட்டு சென்றதாக அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சைதமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சைதமாவின் வீட்டுக்கு வந்து சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்தும் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்