Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்கத்தில் ஆபத்தான நிலைமை: ஆளுநர் ஜக்தீப் தன்கர் எச்சரிக்கை

ஜுன் 22, 2021 11:42

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைால் ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது. இது மிகுந்த கவலை அளிக்கிறது என்று அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், வடக்கு வங்காளத்தில் ஒருவார கால பயணத்தை நேற்று தொடங்கினார். இந்நிலையில் சிலிகுரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் மே 2-ம் தேதிக்கு பிறகு ஏற்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் நான் கவலை அடைந்துள்ளேன். இந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் மாநிலத்தில் ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது. இது மிகுந்த கவலை அளிக்கிறது.

இந்த வகையான வன்முறை ஜனநாயக அமைப்பில் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை நடந்து பல வாரங்களுக்கு பிறகும், வன்முறை தொடர்பான புகார்களை மாநில அரசு நிராகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஏன் மவுனம் காக்கிறார்? தீக்கோழி போன்ற மாநில அரசின் நிலைப்பாடு ஏற்கத்தக்கது அல்ல.

இவ்வாறு ஜக்தீப் தன்கர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்