Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலங்களின் கையிருப்பில் 1.92 கோடி தடுப்பூசிகள் - மத்திய அரசு தகவல்

ஜுன் 24, 2021 11:19

புதுடெல்லி: தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கப்பட்டு வரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை மற்றும் போடப்பட்டவை, மீதமிருப்பவை குறித்த விவரங்களை மத்திய அரசு அடிக்கடி வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் நேற்று காலை நிலவரப்படி 1 கோடியே 92 லட்சத்து 465 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாகவும், அடுத்த ஓரிரு நாட்களில் மேலும் 39.07 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

மத்திய அரசின் இலவச வினியோகம் மற்றும் நேரடி கொள்முதல் போன்றவற்றின் மூலம் இதுவரை 29.68 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெற்றிருப்பதாகவும், இதில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 27.76 கோடிக்கு மேற்பட்ட டோஸ்கள் (வீணானவை உள்பட) பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

தலைப்புச்செய்திகள்