Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு வழங்க 2 லட்சம் மூக்குக் கண்ணாடிகள் தயார்: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

ஜுன் 24, 2021 12:52

சென்னை: பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, மூக்குக் கண்ணாடி வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

`கண்ணொளி காப்போம்' என்றதிட்டம் மூலம், பள்ளி மாணவர்களுக்கு கண்களில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்து, அவர்கள் தடையின்றி கல்வி பயில ஏதுவாக ஆண்டுதோறும் இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால், கரோனா பரவலால்கடந்த ஒன்றரை ஆண்டாக இந்ததிட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்படவில்லை. தற்போது பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.4.40 கோடி மதிப்பில், 2 லட்சம் மூக்குக் கண்ணாடிகள் தயார் நிலையில் உள்ளன.

எனவே, இந்த திட்டத்தின்கீழ் ஏற்கெனவே பயனடைந்த அனைத்துவித பள்ளி மாணவர்கள் மற்றும் பிற கண் குறைபாடு உடையகுழந்தைகளை அவரவர் பள்ளிகளுக்கு அல்லது அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரவழைத்து, இலவச மூக்குக் கண்ணாடி தருவதற்கு சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், இத்திட்டம் சார்ந்த மேலாளர்களை தொடர்புகொண்டு, இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்துக்கு அறிக்கையாக அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும், இந்தப் பணிகளின்போது, அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்