Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டிக்டாக் ஆப் தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை

ஏப்ரல் 24, 2019 10:10

திருவள்ளூர்: ‘டிக்டாக்’ ஆப்பை தவறான நோக்கில் செயல்படுத்தி, வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் எஸ்.பி., பொன்னி தெரிவித்துள்ளார்.சாதி, மதம் ரீதியாக பிற சமூகத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில், மதம், சாதி சம்பந்தமாக அவதூறாக ‘டிக்டாக்’ செயலி மூலம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தால், சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்துவதோடு, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளை ஜனநாயக ரீதியாக மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.  

இது போல் பிற சாதி, மதத்தை விமர்சித்து வன்முறையை தூண்டும் விதத்திலும், தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்களை விமர்சனம் செய்து வீடியோ பதிவிடுதல், மனதை புன்படுத்தும் வாசகங்களை பதிவு செய்ய கூடாது.பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சமூக வலைதளங்களை நல்ல நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  

எந்த காரணத்தை கொண்டும் சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில், இருவேறு சமூகத்தினரிடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்.பி., பொன்னி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்