Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கால் வேலை இழந்த கல்குவாரி ஊழியர் தற்கொலை

ஜுன் 26, 2021 10:30

திருக்கனூர்: திருக்கனூர் புதுநகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 44). திருவக்கரையில் உள்ள கல்குவாரி கிரஷரில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி உமாதேவி.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக ஜனார்த்தனன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் குடும்பம் நடத்த வழியில்லாமல் தவித்து வந்தார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. எனவே வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜனார்த்தனன் வீட்டின் மாடியில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

புதுச்சேரி கண் டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் சுரேந்தர் வயது (21) இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தாயார் லட்சுமி (45) கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுரேந்தர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்