Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலங்களுக்கு 3 நாளில் 19 லட்சம் தடுப்பூசி வினியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை

ஜுன் 27, 2021 10:03

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான வலிமையான பேராயுதம் தடுப்பூசி ஒன்றுதான் என்பதால் நாட்டு மக்களிடையே தடுப்பூசி போடுவதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 31 கோடியே 17 லட்சத்து 1,800 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

இவற்றில் 29 கோடியே 4 லட்சத்து 4,264 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளன. வீணான தடுப்பூசிகளும் இதில் அடங்கும். மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1 கோடியே 45 லட்சத்து 21 ஆயிரத்து 67 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இந்த நிலையில் அடுத்த 3 நாளில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 19 லட்சத்து 10 ஆயிரத்து 650 தடுப்பூசி களை வினியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்