Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புயல் முன்னேற்பாடுகள் தயார்: கடலூர் ஆட்சியர்

ஏப்ரல் 24, 2019 10:17

சென்னை : வரும் ஏப். 28 முதல் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், அதனை எதிர்கொள்வற்கான அத்தனை ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக கடலுார் ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியுள்ளார்.  

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் விளக்கினார். 

அப்போது அவர் பேசுகையில், 'வரும் 25 ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றுழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும். 27 ஆம் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். அடுத்த 2 நாட்களில் அந்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து, 29 ஆம் தேதி புயலாக உருவாகக்கூடும். இதனால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது,' என்று அறிவித்தார். 

தற்போது ஏப் - 28 முதலே புயல் சின்னம் தோன்றும் ; அதனால் கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் தான், புயல் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக கடலுார் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்