Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்கு சாவடி

ஏப்ரல் 24, 2019 10:44

குஜராத்: குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்துக்குட்பட்ட கிர் வனப்பகுதியில் சிங்கங்களை பாதுகாக்கும் மிகப்பெரிய தேசிய பூங்கா அமைந்துள்ளது. அந்த அடர்ந்த காட்டுக்குள் ‘பனெஜ்’ என்ற இடத்தில் மிகப்பழமையான சிவன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் 60 வயதை கடந்த ‘பாரத்தாஸ் பாப்பு’ என்பவர் பூசாரியாக உள்ளார். கோவில் வளாகத்தில் தங்கி இருக்கும் அவர் அந்த முகவரியில் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் எடுத்து வைத்துள்ளார்.   

அவர் வசிக்கும் பகுதி அடர்ந்த காட்டுக்குள் சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேர்தல் கமிஷன் விதிப்படி ஒரு வாக்காளர் தன் வாக்கை பதிவு செய்ய 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பயணம் செய்யக் கூடாது. இந்நிலையில், அந்த மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பாரத்தாஸ் பாப்பு என்ற ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. பாரத்தாஸ் பாப்பு இங்கு வந்து வாக்களித்தார். இதனால், இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்ட பெருமை இந்த வாக்குச்சாவடிக்கு கிடைத்துள்ளது.  
 

தலைப்புச்செய்திகள்