Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு 15,000 கனஅடி திறப்பு

ஜுன் 27, 2021 11:33

மேட்டூர்: மேட்டூர்அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்தகனமழையை தொடர்ந்து கர்நாடக மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தபடி இருந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 8,035 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 5,455 கனஅடியாக சரிந்தது.

அணையில் இருந்து நேற்று காலை டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், பாசனத்துக்கான நீர் திறப்பு நேற்று மாலை 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 88.98 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலை 88.61 அடியாக குறைந்தது. அணையின் மொத்த நீர் இருப்பு 51.07 டிஎம்சியாக உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்