Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திராவில் அரசுப் பணிகளுக்கான நேர்முக தேர்வுகளை ரத்து செய்து ஆணை

ஜுன் 27, 2021 11:42

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது தேர்தல் வாக்குறுதியில், தான் ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு 2 லட்சம் அரசு வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி வழங்காததால், எதிர்க்கட்சியினர் உட்பட பட்டதாரிகள், பெற்றோர் என பலத்தரப்பினர் ஜெகன் அரசை விமர்சிக்க தொடங்கினர். இதனால், சமீபத்தில் 10,200 அரசுப் பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்து, அதற்கான அட்டவணையையும் முதல்வர் வெளியிட்டார்.

இந்நிலையில், குரூப் 1 வேலை முதற்கொண்டு அனைத்து அரசு பணிகளுக்கும் எழுத்து தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்றும், நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது எனவும் புதிய அரசாணையை ஆந்திர அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அப்படியெனில், பணிக்கான ஆட்களை எப்படி தேர்வு செய்வர் என மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்