Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசின் பொய் வெளிப்பட்டுள்ளது: ஓவைசி விமர்சனம்

ஜுன் 28, 2021 10:52

புதுடெல்லி: மத்திய அரசு ஆகஸ்ட் மாத்திற்குள் 135 கோடி தடுப்பூசி டோஸ்கள் தயாராகிவிடும் என்றும் கூறும் நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதிகமாக தெரிவித்தார் என ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் இந்திய அரசும் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தியுள்ளது. மாநில அரசுகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தட்டுப்பாடு இருப்பதாக மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன.

இந்தியாவில் உள்ள தகுதியான மக்கள் அனைவருக்கும் டிசம்பருக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திடுவோம் என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் சுமார் 213 கோடி டோஸ்கள் அதற்குள் தயாரிக்கப்பட்டு விடுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-​இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி, தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசின் பொய் வெளிப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஓவைசி கூறுகையில் ‘‘மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், ஆகஸ்ட் மாத்திற்குள் 135 கோடி தடுப்பூசி டோஸ்களை ஏற்பாடு செய்து விடுவோம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், மே 28-ந்தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டிசம்பருக்குள் 213 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கும் என்றார். மத்திய அரசு 213 கோடி தடுப்பூசி டோஸ்களில் இருந்து 135 டோஸ்களுக்கு இறங்கி வந்துள்ளது. அவர்களின் பொய் வெளிப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 7.60 கோடி டோஸ்கள் வழங்கும் என மத்திய அரசு மற்றொரு பொய்யை கூறியுள்ளது. ஜூன் மாதத்தில் 50 லட்சம் டோஸ்கள் வழங்கியுள்ளது. அப்படியிருக்கும்போது சாத்தியமாகுமா?. இதுபோன்ற மிகப்பெரிய எண்ணிக்கை காமிக்ஸ் புத்தக்தில் பார்க்க சிறப்பாக இருக்கும்’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்