Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை குடோனில் தீ விபத்து

ஜுன் 28, 2021 11:04

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) குடோன் ஒன்றில் இன்று (திங்கள்கிழமை) காலை ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டது.  அதிகாலை 5 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 

தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் தீவிபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்