Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 37,566 ஆக குறைவு 

ஜுன் 29, 2021 11:32

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 37,566 ஆக உள்ளநிலையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,52,659 ஆக சரிந்துள்ளது. கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,03,16,897

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 37,566

இதுவரை குணமடைந்தோர்: 2,93,66,601

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 56,994

கரோனா உயிரிழப்புகள்: 3,97,637

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 907

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 5,52,659

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்