Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து - ஐ.நா.வில் இந்தியா கருத்து

ஜுன் 30, 2021 10:33

நியூயார்க்: ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் விமானப்படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், ஐ.நா. பொதுக்குழுவில் உலகளாவிய பயங்கரவாதம் குறித்த விவாதத்தின்போது ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து பிரச்சினை எழுப்பிய இந்தியா, பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து என கருத்து தெரிவித்தது.

மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதம் ஏந்திய டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து சர்வதேச சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியது.

இதுகுறித்து இந்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் வி.எஸ்‌.கே.கவுமுடி கூறுகையில், குறைந்த விலை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய டிரோன்களை பயங்கரவாத குழுக்கள் மோசமான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உடனடி ஆபத்து மற்றும் சவாலாக மாறியுள்ளது. வணிக சொத்துக்களுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகளில் சர்வதேச சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றா
 

தலைப்புச்செய்திகள்