Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

6-ம் ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; பயனாளிகளுடன்  பிரதமர்  மோடி நாளை உரையாடல்

ஜுன் 30, 2021 11:56

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை 2015-ம் ஆண்டு ஜூலை 1 அன்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் டிஜிட்டல் வசதி ஏற்படுத்துவது, தேவைகளுக்கு ஏற்ப சேவைகள் மற்றும் நிர்வாகத்தை பயன்படுத்துவது, குடி மகன்களுக்கும் டிஜிட்டல் அறிவை உயர்த்துவது போன்றவை டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அரசு அறி வித்தது.

இந்த திட்டத்தின் மூலம் அகண்ட அலைவரிசை சேவைகள், சர்வ தேச அளவிலான செல்போன் இணைப்பு, பொதுமக்கள் இணைய தளத்தை பயன்படுத்தும் திட்டங்கள், அரசு நிர்வாகத்தை தொழில் நுட்பமாக மாற்றுவது, எலக்ட்ரானிக் டெலிவரி சர்வீஸ், அனை வருக்குமான தகவல் சேவைகள், மின்னணு உற்பத்தியை அதிக ரிப்பது, தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட இலக்குகளை இந்த திட்டம் கொண் டுள்ளது.

‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் சிறப்பு நிகழ்ச்சிக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட பயனாளிகளுடன் உரையாடவுள்ளார். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்.

சேவைகளை மேம்படுத்தி, அரசை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வந்து மக்கள் ஈடுபாட்டை ஊக்கப்படுத்தி மக்களுக்கு அதிகாரமளித்து புதிய இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி கதைகளில் ஒன்றாக டிஜிட்டல் இந்தியா திட்டம் உள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்