Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூடுதலாக 100 விரைவு பஸ்கள் இயக்க திட்டம்

ஜுலை 01, 2021 05:17

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

கடந்த 28-ந் தேதி முதல் 50 சதவீத பயணிகளுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் குறைந்த அளவில் பயணிகள் பயணம் செய்கிறார்கள். ஆனால் நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுவரையில் 300 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், வரும் நாட்களில் கூடுதலாக 100 பஸ்கள் இயக்கப்படும்.

கூடுதலாக பஸ்களை இயக்குவதற்கு தயாராக இருக்கிறோம். தேவைக்கு தகுந்தாற்போல் பஸ்கள் விடப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம், சேலம், கும்பகோணம் போக்குவரத்து கழக பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. இன்று முதல் கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக உள்ளனர்.

தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் இன்று முதல் முழு வீச்சில் இயக்கப்படுகிறது. காலாண்டு வரி சலுகை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்திருந்ததால், கடந்த 3 நாட்கள் அதிகளவு ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்...தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு புதிய காலாண்டு வரிக்கான காலம் இன்று தொடங்கி இருப்பதால், பெரும்பாலான பஸ் உரிமையாளர்கள் வெளியூருக்கு பஸ்களை இயக்க தயாராகி உள்ளனர். கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இன்று மாலையில் இருந்து அதிகளவு பஸ்கள் புறப்படுகின்றன.

தலைப்புச்செய்திகள்