Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

ஜுலை 03, 2021 10:18

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராஜ்போரா பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இன்று அதிகாலை பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென சரமாரியாக துப் பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினார்கள். நீண்ட நேரம் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதால் பாதுகாப்பு  படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் முன்னேறினார்கள். அப்போது பயங்கரவாதிகள் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவருக்கு பலத்த குண்டு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். பயங்கரவாதிகள் 3 அல்லது 4 பேர் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்தபடி இருக்கிறது.
 

தலைப்புச்செய்திகள்