Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

ஜுலை 06, 2021 02:06

கோல்கட்டா : 'பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அவற்றுக்கான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரியை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: மத்திய அரசின் கொள்கைகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். உங்கள் கவனத்தை அவர்கள் மீது திருப்பவே இந்த கடிதம். மத்திய அரசின் வருவாய் அதிகரிப்பிற்காக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணை பொருட்கள் மீதான 'செஸ்' வரி தொடர்ந்து அதிகரிக்கப் பட்டு வருகிறது.பல மாநிலங்களில் பெட்ரோல் சில்லரை விற்பனை விலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் லிட்டர் 100 ரூபாயை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு இடையிலும் பெட்ரோல் மற்றும் அதுதொடர்பான பொருட்கள் வாயிலாக கடந்த நிதி ஆண்டில் மத்திய அரசுக்கு 3.71 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இதுபோல் வசூலிக்கப்படும் செஸ் வரியில் மாநிலங்களுக்கு பங்கு ஏதும் தரப்படுவதில்லை. இருப்பினும் வரியின் அளவு தொடர்ந்து உயர்வதால் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது.இதனால் மக்கள் படும் துயரங்களை கருத்தில் வைத்து பெட்ரோல் டீசல் மீதான வரிகளை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்