Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கஞ்சா புகைத்த இளைஞர்கள் : தடுத்தவர்களை அரிவாளுடன் மிரட்டும் காட்சி

ஜுலை 07, 2021 01:29

தேனி:  கஞ்சா போதையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அரிவாளுடன் சென்று ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் மாதாந்திர பரிசோதனை மற்றும் சிறு சிறு வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரமப சுகாதார நிலையத்தின் பின் பகுதியில் சிலர் மது மற்றும் கஞ்சா அருந்தி விட்டு தகாத வார்த்தகளால் பேசி சத்தம் போடுவதுமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் கஞ்சா போதை ஆசாமி இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்த நிலையில் போதையில் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக தகாத வார்த்தைகளை கூறி சத்தம் போட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு இருந்த வயதானவர் அவர்களை தட்டி கேட்டு சத்தம் போட்ட போது இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து அவரை தாக்க முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் போதை ஆசாமி அரிவாளால் தாக்க முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியாகி உள்ளது. மேலும் கெங்குவார்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் பணி புரியும் செவிலியர்கள் இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் போதை ஆசாமிகளால் தங்களுக்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

மேலும் அரிவாளை எடுத்து தாக்க வரும் நபரின் தந்தை ரவுடி செல்வம் எனவும், அவரது மகன் ரிசந்த் எனபவர் போதையில் அரிவாளை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மிரட்டி தகாத கெட்ட வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே தேவதானபட்டி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மருத்துவ செவிலியர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்