Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விலங்குகளுக்கும்  தடுப்பூசி

ஜுலை 07, 2021 04:04

நாகப்பட்டினம்: விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் தொற்றுகளை தடுக்கும் வகையில் உலக உயிரியல் தினத்தை முன்னிட்டு நாகை கால்நடை மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் தொற்றுக்களை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் உலக உயிரியல் தினம் ஜூலை 6 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி உலக உயிரியல் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி முகாமில் வீட்டு வளர்ப்பு செல்லப் பிராணிகளான நாய், ஆடு, பூனை, குதிரை, உள்ளிட்ட உயிரினங்களை அழைத்து வந்த உரிமையாளர்கள் இலவசமாக தடுப்பு ஊசியை செலுத்தி சென்றனர்.

முதுகெலும்பு உள்ள விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஜூனோசிஸ் என்ற தொற்று நோய் குறித்தும், தொற்று பரவுதலை தடுக்கும் முறைகள் குறித்தும் செல்ல பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், தடுப்பூசி செலுத்தினால் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்