Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: வானிலை மையம் எச்சரிக்கை

ஜுலை 08, 2021 04:10

சென்னை: சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை:

இன்று

உள் தமிழகம் முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை(ஜூலை09)

நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்மற்றும் புதுச்சேர பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைவதால் ஜூலை 10 முதல் 12 வரை நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் ஈரோடு. திருநெல்வேலி, விருதுநகர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையை நிலவும்.

நாளை முதல் ஜூலை 12 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.ம., வேகத்திலும் , ஜூலை 10 முதல் 12 வரை மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தமிழகத்தின் கடலோரப்பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., இடைஇடையே 60 கி.மீ, வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

ஜூலை09 முதல் 12 வரை கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு,தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் . இதனால், மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்