Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் & எக்ஸ்னேரா ஆலோசனை கூட்டம் :

ஜுலை 08, 2021 05:00

கரூர்:  கரூர் மாவட்டம் குளித்தலை கிராமியம் மீட்டிங் ஹாலில் திருக்கோயில்களை பசுமையாக பராமரிப்பது தொடர்பாக அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் எக்ஸ்னோரா  தொண்டு நிறுவனத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில கெளரவ தலைவர்  டாக்டர்.நாராயணன் அவர்கள் தலைமை வகித்தார்.இந்த கூட்டத்தில் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள்  இளம்பூரணன் , சுகுணன் , குமார் , ரெங்க பிரசாத் ஆகியோர் கோயில்களில் பசுமையாக பராமரிப்பது சம்பந்தமான பல்வேறு வகையான விளக்கங்களை எடுத்துரைத்தனர். 

தமிழகத்தில் உள்ள இந்து திருக்கோயில்களில் தினமும் சுவாமிகளுக்கு பூஜைக்காக பயன்படுத்தும் பூக்கள் ,  மாலைகள் வீணாகாமல் அதனை ஓர் இடத்தில் சேகரித்து இயற்கை உரமாக மாற்றி அதை நந்தவனம் அமைத்து அதற்கு அந்த உரங்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் , பக்தர்களுக்கு பிரசாதமாக சமைக்கப்படும் போது அதில் கிடைக்கக்கூடிய காய்கறி கழிவுகளை இயற்கை உரமாக மாற்றுவது மேலும் கோசாலைகள் கிடைக்கும் கழிவுகளிலிருந்து இயற்கை எரிவாயு தயாரித்து அதனை பயன்படுத்துவது எவ்வாறு என்று உட்பட பல்வேறு பணிகளைப் பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டது.

எக்ஸ்னோரா அமைப்பானது திருச்சி ஸ்ரீரங்கம் , திருவானைக்கோயில் , சென்னை கபாலீஸ்வரர் கோயில்கள் உட்பட பல கோயில்களில் இத்திட்டமானது சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். அதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களிலும்  இந்த திட்டத்தினை செயல்படுவது குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு செய்யப்பட்டது.இந்த கூட்டத்தில் கிராமியம் கோபால் மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன் , கருணாநிதி , ஆனந்த் , வினோத் , முரளிதரன் , ரவி , கரூர் பிச்சமுத்து , மூர்த்தியானந்தா சுவாமிகள் , மாணிக்கம் , வாட்போக்கி , சுந்தர் ,  ஜோதிடர் அருள் , தர்மா , திருமுருகன் , Er.சரவணன் , காவி.சரவணன் உட்பட மற்றும் பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் பேசிய சங்கத்தின் தலைவர் A.அருள்வேலன் ஜி விரைவில் கரூர் மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள  பிரசித்தி பெற்ற ஆலயங்களில் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்திட திருக்கோயில் பாதுகாப்பு சங்கம் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்