Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாகையில் அசத்தும் அரசு உதவி பெறும் பள்ளியாசிரியர்கள்

ஜுலை 08, 2021 05:02

நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு சொந்த செலவில் அரிசி மூட்டைகளை வழங்கி ஆசிரியர்கள் அசத்தல். 

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளின் மோகத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில்  வகையில் நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் புதிதாக ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அரிசி மூட்டை வழங்கி ஊக்கப்படுத்தி ஆசிரியர்கள் அசத்தி வருகின்றனர். 

அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் இதுவரை புதிதாக ஆறாம் வகுப்பில் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தலா 10 கிலோ அரிசி மூட்டைகளை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராமலிங்கம் வழங்கினார். கொரோனா ஊரடங்கால் சிரமப்படும் குடும்பங்களுக்கு அரிசி பயனுள்ளதாக இருக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு சொந்த செலவில் அரிசி மூட்டைகளை வழங்கி ஊக்கப்படுத்தி வரும் நாகூர் தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்