Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணல் திருட்டால் நீராதாரம் பாதிப்பு

ஜுலை 09, 2021 10:40

பெரியகுளம்: வடுகபட்டி வராகநதி மற்றும் வேட்டுவன்குளத்தில் மணல் திருடுவதால் நீராதாரம் பாதிக்கப்படுவதுடன் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது.பெரியகுளம் வராகநதியில் சிறிதளவு செல்லும் தண்ணீர் வடுகபட்டி வராகநதியை கடக்கிறது.ஜெயமங்கலம் பகுதியில் வேட்டுவன்குளம் உள்ளது. தேவதானப்பட்டி முருகமலைப்பகுதியில் பெய்யும் மழைநீர், நான்கு ஓடைகளின் வழியாக குளத்தில் தேங்குகிறது. 

இதனால் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, வாழை விவசாயிகள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் சிலர் இங்கு தொடர்ச்சியாக மணல் திருடி வருகின்றனர். தலா 20 முதல் 25 கிலோ வரை மூடைகளாக கட்டி நுாற்றுக்கணக்கில் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

இதனால் வராகநதி மற்றும் வேட்டுவன் குளத்தில் எட்டு அடி முதல் பத்து அடி வரை பள்ளம் ஏற்பட்டு நீராதாரம் பாதிக்கிறது. வடுகபட்டி பாலம் பலம் இழந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாகயுள்ளது.

தலைப்புச்செய்திகள்