Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் 13-ம் தேதி பிரதமர் உரையாடுகிறார்

ஜுலை 10, 2021 12:43

புதுடெல்லி:டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி மாலை 5 மணி அளவில் காணொலி மூலமாக உரையாடுகிறார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுநடைபெற வேண்டிய இந்தத் தொடர், கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக தற்போது நடத்தப்பட உள்ளது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 115-க்கும்மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்,வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி மாலை 5 மணி அளவில் அவர்களுடன் காணொலி மூலமாக உரையாட உள்ளார்.

இதற்கிடையே டோக்கியோ நகரில் வைரஸ் தொற்று அதிகரித்துவருவதால் ஒலிம்பிக் போட்டியைநேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என ஜப்பான் அரசு நேற்றுமுன்தினம் அறிவித்தது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்