Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

ஜுலை 11, 2021 12:19

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது டி20 போட்டி இன்று காலை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெட்மயர் 61 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட், மிட்செல் மார்ஸ், அகர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரின் 2 பந்திலேயே முதல் விக்கெட்டை விட்டு கொடுத்தது.

முதலில் இருந்து திணறிய ஆஸ்திரேலியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 101 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 113 ரன்கள் எடுப்பதற்குள் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்தது. 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஹெட்மயர் தேர்வு செய்யப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வால்ஷ் 3 விக்கெட், காட்ரெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

தலைப்புச்செய்திகள்