Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக-பாஜகவின் தோழமை என்றும் வளர வேண்டும் - அண்ணாமலை

ஜுலை 11, 2021 12:22

சென்னை: தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு கட்சியின் தலைவா் தொடா்ந்து வாழ்த்துக் கூறி வருகின்றனா்.

எதிர்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து கூறினா். இருவருக்கும் கே.அண்ணாமலை சுட்டுரையில் நன்றி கூறியுள்ளார் அதில், அதிமுக - பாஜகவின் தோழமை இன்று போல் என்றும் வளர வேண்டும் என்று கூறியுள்ளார்.

அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவினரும் பாஜகவினரும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டனா். அதைத் தொடா்ந்து ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் 'அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்' என்று அறிவித்தனா். தற்போது கே.அண்ணாமலையும் அதை உறுதி செய்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்