Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்டா  வைரஸ் மோசமானது: ஆண்டனி ஃபாசி

ஜுலை 12, 2021 12:32

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் மோசமானது என அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் அதிக தொற்று தன்மை கொண்டதாக உள்ளது என்று அவர் தொடர்ந்து அவர் உலக நாடுகளை எச்சரித்து வருகிறார்.

இதுகுறித்து ஆண்டனி ஃபாசி கூறும்போது., “டெல்டா வைரஸ் மிகக் மோசமான வைரஸ் என்பது தெளிவாகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்று பரவுவதை டெல்டா வைரஸ் அதிகப்படுத்தியுள்ளது. டெல்டா வைரஸை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா சிறப்பாக செயல்படுகிறது. டெல்டா வைரஸை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் செயல்படுகின்றன. இது நல்ல செய்தி. அமெரிக்காவில் சில இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்