Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

ஜுலை 12, 2021 12:37

சென்னை: சோழிங்கநல்லூர் மேற்கு பகுதியைச் சார்ந்த அமமுக நிர்வாகிகள், அதிமுக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி. கந்தன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில், அமமுக தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கண்ணகி நகரைச் சேர்ந்த அமமுக பகுதி இணை செயலாளர் வி. பாலகிருஷ்ணன், 195-வது வட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர். எஸ்.மணி, 195-வது வட்ட பிரதிநிதி எம். மனோகரன், பகுதி வர்த்தக அணி செயலாளர் பி.செல்வராஜ், 195-வது வட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பி.ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று சென்னை புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், மேற்கு பகுதி கழக செயலாளர் டி.சி.கருணா ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக பணியாற்றி, அதிமுகவின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என கட்சியில் இணைந்த நிர்வாகிகளிடம், மாவட்ட செயலாளர் கந்தன் கேட்டுக் கொண்டார்.

தலைப்புச்செய்திகள்