Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்- தேர்ச்சி விகிதத்தில் சாதனை படைத்த கேரளா

ஜுலை 15, 2021 11:06

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக அளவாக 99.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 98.82 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு அதைவிட 0.65 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த ஆண்டு அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக கண்ணூர் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் 99.85 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 98.12 சதவீத தேர்ச்சி பெற்ற வயநாடு மாவட்டம் குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது.

கடந்த ஆண்டு 1937 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 2214 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் தேர்ச்சி சதவீதம் 97.03 ஆகும். வளைகுடா பிராந்தியத்தில் தேர்வு நடைபெற்ற 3 மையங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்வு முடிவுகளை வெளியிட்ட கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி, இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கொரோனா சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக அவர் பாராட்டினார்.
 

தலைப்புச்செய்திகள்