Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வு: திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதி வெட்ட வெளிச்சமாகிவிட்டது: கடம்பூர் ராஜூ விமர்சனம்

ஜுலை 15, 2021 02:29

கோவில்பட்டி: ``நீட் தேர்வு பிரச்சினையில் திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதி வெட்ட வெளிச்சமாகிவிட்டது” என, அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3.50 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடத்தை கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சிக்குவந்தால் நீட் தேர்வுஇருக்காது என, திமுக தனதுதேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்த பின்னர்அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.4-ம் குறைப்போம் என கூறியிருந்தனர். ஆளுநர் உரையில் அந்த அம்சமே இல்லை.

நீட் தேர்வு வேண்டாம் என மீண்டும் தீர்மானம் போடுவோம் என்கின்றனர். ஏற்கெனவே, சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியின்போது, நீட் தேர்வு வேண்டாம்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை மத்திய அரசுக்குஅனுப்பி இருந்தோம். இன்றைக்குஅவர்களது பொய்யான தேர்தல்வாக்குறுதி வெட்டவெளிச்சமாகிவிட்டது. நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்ற நிலையில் தமிழக வாக்காளர்கள் உள்ளனர்.

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி பகுதிகள் பயன்பெற வேண்டி தாமிரபரணி - வைப்பாறு திட்டத்தை அதிமுக அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு முதற்கட்டமாக நில எடுப்புக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தினாலே அப்பகுதி பசுமையாக மாறிவிடும், என்றார் அவர்.

தலைப்புச்செய்திகள்