Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப் போராட்டத்தை சரியாக முன்னெடுக்காத அதிமுக: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

ஜுலை 16, 2021 04:55

விருதுநகரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி. அருகில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர். நீட் தேர்வில் தற்போதைய நிலைக்கு கடந்த ஆட்சியில் சட்டப் போராட்டத்தை சரியாக மேற்கொள்ளாததுதான் காரணம் என்று கனிமொழி எம்.பி. தெரி வித்தார்.

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள மணிமண்டபத்தில், அவரது உருவச் சிலைக்கு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் இன்று கல்வியில் முன்னிலையில் இருப்பதற்கு அடித்தளம் இட்டவர் காமராஜர். அதை நாம் நன்றியோடு நினைவு கொள்வோம். கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போதுதான் காமராஜரின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அறிவிப்பு வெளியிடப்பட்டது. கருணாநிதி வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் அனை வருக்கும் கல்வி கிடைக்க வேண் டும் என்ற குறிக்கோளை முன் னெடுத்து வருகிறார்.

நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த ஆட்சியில் சட்டப் போராட்டத்தை சரியாக கையில் எடுக்கவில்லை. தமிழக மாணவர்கள் இன்று பாதிக்கப்படுவதற்கு அதுதான் காரணம். இனிவரும் காலங் களில் இந்நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் தொலைநோக்குப் பார்வையோடு தமிழக முதல்வர் ஒரு குழுவை அமைத்துள்ளார் என்று கூறினார்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு பாஜக துணை நிற்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "நியாயமான விஷயங்களுக்கு பாஜக துணை நின்றால் நல்லதுதான்" என்று கனிமொழி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் எம்.பி தனுஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்