Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேகதாது அணை கட்டக்கூடாது என்பதே தமிழக பாஜக நிலைப்பாடு - அண்ணாமலை

ஜுலை 17, 2021 11:36

சென்னை: தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைவராக நியமித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டார். 

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள, கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய அமைச்சரும் முன்னாள் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இல.கணேசன், சட்டசபை பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவரிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, மேகதாது அணை கட்டக் கூடாது என்பதே தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்