Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு

ஜுலை 17, 2021 11:43

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு வாரம் 3 முறை விலை நிர்ணயம் செய்கிறது. கடந்த ஒரு வாரமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 4.80 காசாக இருந்து வந்தது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து முட்டை விற்பனை அதிகரித்தது.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் என்.இ.சி.சி. முட்டை விலையில் 15 காசுகள் உயர்த்தி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை 4.95 காசுகள் என நிர்ணயம் செய்தது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் டாக்டர் செல்வராஜ் தலைமையில் இன்று நடந்தது. பிறமண்டலங்களில் முட்டை விலையும்,விற்பனையும் அதிகரித்து உள்ளதால் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை 5.05 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2 நாளில் முட்டைவிலை 25 காசுகள் உயர்ந்துள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை வருமாறு:-

ஆமதாபாத்-5.37 காசுகள், சென்னை-5.20 காசுகள், சித்தூர்-5.13, டெல்லி-5.10, விஜயவாடா-4.93.

தலைப்புச்செய்திகள்