Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை - சரத்பவார்

ஜுலை 18, 2021 10:18

புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் நேற்று புதுடெல்லியில்  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதனை  பிரதமர் அலுவலகம் இரு தலைவர்களின் புகைப்படத்துடன் டுவிட் செய்துள்ளது.

2022-ம் ஆண்டில் நடைபெறும் ஜனாதிபதி  தேர்தலில்  ஜனாதிபதி வேட்பாளராக சரத்பவார்  போட்டியிடக் கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருந்தாலும் இந்த யூகங்களை சரத்பவார் மறுத்துள்ளார்.

பிரதமர் மோடி - சரத்பவார் சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நடந்தது. இரு தலைவர்களும் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுறவு  அமைச்சகம் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருவருக்கும் இடையே அரசியல் குறித்து  விவாதிக்கப்படவில்லை. இந்தியாவில் கொரோனா நிலைமை குறித்து விவாதித்ததாக சரத் பவார் தெரிவித்தார். 

இதுகுறித்து சரத்பவார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பில்  தேசிய நலனுக்கான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படடது என தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்