Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும்

ஜுலை 18, 2021 10:19

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதையடுத்து இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது கடந்த 16-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆகும். ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

நாளை காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்