Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக கலவரம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 212 ஆக உயர்வு 

ஜுலை 18, 2021 11:35

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களை குறிவைத்து நடைபெறும் கலவரம், வன்முறையில் இதுவரை 212 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கடந்த 7-ம் தேதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுவதும் கலவரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த கலவரத்தின்போது இந்திய வம்சாவளியினர் குறிவைத்து தாக்கப்படு கின்றனர்.

டர்பன், ஜோகன்னஸ்பர்க் உள்ளிட்ட நகரங்களில் இந்தியர் கள் பெரும்பான்மையாக வசிக் கின்றனர். அந்த நகரங்களில் இந்தியர்கள் நடத்தும் வணிக வளாகங்கள், கடைகள் சூறை யாடப்பட்டு வருகின்றன. கலவரம், வன்முறையில் இதுவரை 212 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். கலவரத்தை கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 25,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் நாளேடி பாண்டருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.டெல்லியில் உள்ள தென்னாப்பிரிக்க தூதரிடம் மத்திய அரசுசார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோஸா கலவரத்தால் பாதிக்கப்பட்ட டர்பன் பகுதியை நேற்று முன்தினம் பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, "கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு தரப்பில் உரியஇழப்பீடு வழங்கப்படும். கலவரத்தை தடுக்க போலீஸார் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கலவரப் பகுதிகளுக்கு அமைச்சர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள் ளனர். அவர்கள் அமைதியை நிலைநாட்டுவார்கள்" என்றார்.

தென்னாப்பிரிக்க காவல் துறை அமைச்சர் பெகி செலி, கலவரம் பாதித்த பகுதியில் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
 

தலைப்புச்செய்திகள்