Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 30ம் தேதி புயல் கரையை கடக்கும்

ஏப்ரல் 25, 2019 11:25

சென்னை: இந்திய பெருங்கடல்-வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக  வாய்ப்பு உள்ளதாவும், பின்னர் அது வலுப்பெற்று புயலாக மாறும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. 

அதன்படி, இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ‘இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். 

பின்னர் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து 29ம் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயல் 30ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது. 

இதனால், 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இதனால், பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், சில இடங்களில் கடல் சீற்றம் காணப்படும். 

இதனால் நாளை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.    இன்று முதல் 29ம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

தலைப்புச்செய்திகள்