Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேடப்பட்டி-கழுகரை சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்

ஜுலை 21, 2021 05:22

மடத்துக்குளம்: திருப்பூர் மாவட்டம் துங்காவியில் இருந்து கழுகரை வரை 8 கி.மீ., நீளத்தில் மாநில சாலை உள்ளது. மலையாண்டிபட்டினம், ஜோத்தம்பட்டி, செங்கன்டிபுதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்களும், உடுமலை-தாராபுரம் வழித்தடத்தில் இருந்து மடத்துக்குளத்துக்கு வரும் பயணிகளும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் போது உடுமலை, தாராபுரம் மற்றும் இதர பகுதிகளுக்குச்செல்ல இந்த சாலை மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது. தினமும் பல நூறு வாகனங்கள் பயன்படுத்தும் இந்த சாலை 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய போக்குவரத்துக்கும், வாகனப்பயன்பாட்டுக்கும் தகுந்தபடி அமைக்கப்பட்டது. 

தற்போது போக்குவரத்து அதிகரித்த நிலையில் இந்த சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு துங்காவியில் இருந்து வேடபட்டி வரை தேவையான இடங்களில்  சாலை அகலப்படுத்தி புதுப்பிக்கப்பட்டது. தற்போது வேடபட்டி நால் ரோட்டிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவிலுள்ள கழுகரை வரை சாலை அகலப்படுத்தப்படுகிறது. இதற்காக சாலையின் ஓரம் நிலம் தோண்டப்பட்டு கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.

தலைப்புச்செய்திகள்