Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

ஜுலை 22, 2021 11:46

சென்னை: அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சோதனை  நடைபெற்று வருகிறது.

அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. 30-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை, கல் குவாரி, அவரது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்