Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க தொடக்க விழா

ஜுலை 22, 2021 11:59


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் தொடக்க விழா,  சங்க நிர்வாகிகள் தேர்வு, சிறப்பு கூட்டம்  கோட்டை மாரியம்மன் கோயில் அன்னதான மண்டபத்தில்  தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாநில தலைவர் சத்யராஜ் முன்னிலையில் நடைபெற்றது. 

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கோவை காமாட்சிபுரி ஆதீனம்சிவலிங்கேஸ்வர சுவாமிகள்  ஆசியுரை வழங்கி விழா  சிறப்புரை ஆற்றினார்.  இதில் பம்பை, உடுக்கை, நாதஸ்வரம், தவில்   நாட்டுப்புற கலைஞர்கள்  திரளாக கலந்து கொண்டனர்.  சேகர் தலைவராகவும், மயில்சாமி துணைத் தலைவர், கணேசன்
செயலாளராகவும், வரதராஜன் துணைச் செயலாளர், மணிகண்டன் பொருளாளராகவும் புதிதாக தேர்வு செய்ய பட்டனர். 
 
அதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கோவை காமாட்சிபுரி ஆதீனம்சிவலிங்கேஸ்வர சுவாமிகள்  கூறியதாவது; 

தமிழகத்தில் நாட்டுப்புற கலைகள் சிறிது, சிறிதாக அழிந்து வருகிறது, நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரத்தை காக்க அரசு சிவன் கோவில்கள், அம்மன் கோவில்களில் தவில், நாதஸ்வரம் வாசிக்கும் நாட்டுப்புற கலைஞர்களை பணியமர்த்தி அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க அரசு உதவிட வேண்டும் என தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்