Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதிப்பு - வங்காளதேசத்தில் ஆகஸ்டு 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜுலை 23, 2021 12:20

டாக்கா: வங்காளதேசத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 11,36,503 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. வங்காளதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,614 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இதனால் மொத்த பாதிப்பு 11,36,503 ஆக உள்ளது.  173 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18,498 ஆக உயர்ந்து உள்ளது.

இதனை முன்னிட்டு வங்காளதேசத்தில் ஆகஸ்டு 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இந்த உத்தரவானது, நாளை (23ந்தேதி) காலை 8 மணி முதல் நடைமுறைக்கு வரும். இந்த முறை கடந்த ஊரடங்கை போன்று இல்லாமல் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என அந்நாட்டு பொது நிர்வாக மந்திரி பர்ஹத் உசைன் தெரிவித்து உள்ளார்.

தலைப்புச்செய்திகள்