Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா ஜாமீனில் விடுதலை

ஜுலை 23, 2021 12:23

டர்பன்: தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர் ஜேக்கப் ஜூமா.  இவர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராக அதிபா் பதவி வகிக்கும் சிறில் ராமபோசா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஜேக்கப் ஜூமா கடந்த 2018-ம் ஆண்டு ராஜினாமா செய்துள்ளார்.

ஜூமாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் அவா் நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக அவருக்கு கடந்த மாதம் 29-ம் தேதி 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடா்ந்து, கடந்த 7-ம் தேதி ஜூமா போலீசாரிடம் சரணடைந்துள்ளார். 

இந்நிலையில், ஜூமாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவரது சகோதரா் மைக்கேல் ஜூமாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கருணை அடிப்படையில் அவருக்கு இந்த ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தலைப்புச்செய்திகள்