Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டைனிக் பாஸ்கர் செய்தித்தாள் குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை: உ.பி. டெலிவிஷன் சேனல் அலுவலகத்திலும் அதிரடி நடவடிக்கை

ஜுலை 23, 2021 01:14

உத்தரப் பிரதேசம்: இந்தியாவின் பிரபலமான செய்தித் தாள் நிறுவனமா்ன ``டைனிக் பாஸ்கர்'’ குழும நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய பகுதி களில் உள்ள இந்நிறுவன அலுவலகங் களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிறுவன உரிமையாளர்கள், பங்குதாரர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார்

30 இடங்களில் 100-க்கும் அதிகமான வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஜெய்ப்பூர், அகமதாபாத், போபால், இந்தூர் ஆகிய இடங்களில் உள்ள நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதாக டைனிக் பாஸ்கர் மூத்த ஆசிரியர் தெரிவித் துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ``பாரத் சமாச்சார்'’ என்ற டெலிவிஷன் சேனல் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள அலுவலகம் மற்றும் சேனல் ஆசிரியர் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப் பட்டதாக வரித்துறையினர் தெரிவிக்கின்றனர். வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக உரிய ஆதாரம் கிடைத்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட தாக வரித்துறையினர் தெரிவிக்கின்ற னர்.

ஆனால் உத்தரப் பிரதேச அரசின் செயல்பாடுகளை இந்த டிவி கடுமையாக விமர்சித்த தால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில் அரசின் செயல்பாடு மிக மோசமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அவை அனைத்தும் இந்த சேனலில் இடம்பெற்றதும் வரித்துறையினர் சோதனை நடத்த காரணம் என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

டைனிக் பாஸ்கர் பத்திரிகையில் மோடி அரசின் செயல்பாடுகள் குறிப்பாக கரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தவறியது கடுமையான விமர்சனத் துக்குள்ளானது. இதை பரவலாக டைனிக் பாஸ்கர் தினசரி வெளியிட்டதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. நோய் பரவல் அதிகரிப்புக்கும், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட தற்கும் அரசின் தவறான அணுகுமுறையே காரணம் என்று கட்டுரைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ``பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இது’’ என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்