Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஐந்து பேர் அறிமுகம்

ஜுலை 23, 2021 04:07

இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், ஐந்து புதுமுக வீரர்களுக்கு கடைசி ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

3-வது மற்றும் கடைசி போட்டி தற்போது இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, சேத்தன் சகாரியா, கே. கவுதம், ராகுல் சாஹர் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்